நான் பள்ளியிலே விட்ட
பட்டத்தின் விலை
இன்றும் மாறவில்லை!
உயர பறக்கிறது.
நான் கல்லூரியிலே பெற்ற
பட்டத்தின் விலை
எத்தனை உயர்வு!
இருந்தும் பறப்பதில்லை.

மலரின் தேன் சொட்டுக்களை
பருக முடியாமல் தனக்கு பற்களில்லை
என்று வண்டுகள் கூட்டம் வாட..

நீந்த மறந்த மீன்கள்
பனிக்கட்டிகளில் சறுக்கியாட ..

உலகமே உறைந்ததோ
என்று நினைக்கும் இந்த
ஆனவ குளிர் காற்றுக்கு..
என் உறையாத சிந்தனை
ஒரு விதிவிலக்கா.. ?,

தன் இனத்தை தானே

அழிக்க மிருகங்கள் கூட

நினைப்பதில்லை.

ஆனால் ஏன் மனிதன்

இத்தனை வெறி கொண்டு

மிருகமாக திரிகிறான்.

வெடித்தும் வெடிக்கவிருக்கும்

குண்டுக்கள் சாய்க்கபோவது

புற்களை மட்டுமல்ல..எத்தனையோ ..

சொல்ல வார்த்தைகளில்லை..

பட்ட மரங்கள் தளர்ந்ததில்லை

மாண்டு மறைந்தவர்கள்

மீன்டதில்லை ..

மறைந்தவர்களுக்கு என் வருத்தங்கள்

வறட்சியும் பஞ்சமும் தலைவிரித்தாட,
பசியும் போராட்டமும் துரத்த,
பூகம்பமும் சுனாமியும் விளையாட
வெடிகுண்டுகள் மழைப் பொழிய,
பொருளாதார வீழ்ச்சி மந்தப்படுத்த....
இத்தனை இறக்கங்களைத் தாங்கியும்.
உலக கணினித்துறைக்கு
முதுகெலும்பு என் நாடு.
விண் ஆராய்ச்சித்துறையின்
மூலதனம் என் நாடு.
எத்தனை சாதனைகள்
அடுக்கிகொண்டே போகலாம் ...
அடுத்த வெற்றி எதில் ?
அடுத்தது என்ன ?

இருளை கண்டு
பயம் கொள்ளாத என்
விழிகளுக்கு ,ஏனோ
மதிய வெளிச்சத்தை காண
துணிச்சலில்லை.

விடியலை அறிந்து
கூவும் கோழிக்கு (சேவல்)
தன் வாழ்வின் விடியலை
அறிய வழியில்லை,
மனிதனின் மனம்
என்று விளங்குமோ அதற்கு!
வளர்த்தவனே வதைக்கிறான்
எத்தனை கொடுமையடா!

fyi:
chicken lovers please bare

சருக்கு மரம்
என்றுதெரிந்தே,
லாபக் கணியைப்
பரிக்க நினைத்து ஏறி
ஏமாறி விழும்
மூடர்களின் கோவில்.

இலக்கை நோக்கி ஏரியப்பட்ட
அம்பல்ல நான்,
இலக்கின்றி சுற்றும்
கடிகார முல்லுமல்ல நான்.

நறுமனமின்றி பூக்கும்
காகிதப் பூவூமல்ல நான்,
மனந்து மயக்கும்
மரிக்கொழுந்துமல்ல நான்.

ஓய்விலே வாழும்
நத்தையல்ல நான்,
ஓயாமலிருக்க
ஏறும்பல்ல நான்.

உலகை மாற்ற நினைக்கும்
பொது-நலமுல்லவனல்ல நான்,
என்னை பற்றி மட்டும்
யோசித்துக் கொண்டிருக்கும்
சுயநலவாதியல்ல நான்!....

என்றோ இறந்த அசுரனுக்காக
இந்த வெகுளி குழந்தைகூட்டத்தின்
ஆட்டம் பாட்டம் இன்றும் தீரவில்லை.
ஆனால் தினம் வாட்டும்
இந்த பசி என்ற
அசுரனை என்று கொல்வோம்
என்று கொண்டாடுவோம்.

--------------------------
குறிப்பு:
வறுமையை ஒழிப்போம்

நேற்றும் இன்றும்
நாளையை நோக்கிச் செல்ல.
நான் இன்றும் நேற்றைய
தினங்களின் நினைவிலே
நாளையை நோக்கி
நகர்கிறேன்!

தாய் சிரித்தாள்.
முதன் முதலாய் நான்
தவழ்ந்த பொழுது.
இந்த ஊரே சிரிக்கிறது!
இன்று
நான் தள்ளாடி
தவழும் பொழுது.
-------------------
போதையில்...
மழலையின் ஞாபகம்
இன்னும் மறக்கவில்லையா நான் ?
இன்றும் தவழ்கிறேன்
தள்ளடுகிறேன் உருள்கிறேன்
நடக்கமுடியவில்லையே!!

சூரிய கதிருக்கு
தலை திருப்ப காத்திருக்கும்
சூரியகாந்தி மலரைப்போல,
உன் வருகைக்காக காத்திருந்தேன் நான்.

ஏனோ இந்த இரவு பகலின்
மோதலுக்கு உன்னை பலியாக்கினேன்
மன்னித்து விடு என்னை.

முட்டை ஒட்டிற்குள் அடைபட்ட
கோழியை போல் உடைபட
காத்திருப்பேன்...

கண்ணாடியில் தன் முகம்
பார்த்து ரசிக்கா விட்டாலும்
இந்த உலகம் உங்கள்
முகம் பார்த்து ரசிக்கும் !
விடுதலை வாங்கித்தந்ததால் அல்ல
ஒரு நூறு ரூபாயில் உன் முகம்
பார்த்த பிறகு ...

நிலவும் நீயும்
முப்பது நாட்களுக்கு ஒரு முறை தான்
முழுதாய் முளைப்பீர்கள்
ஆனால் நீ எத்தனை கொடியவன்
பிறந்தவுடன் என்னை விட்டு
ஓடி ஒளிகிறாய்!..

காலை பொழுது,
அலாரத்துடன் போராடும் போர்களம்!
அலுவலகம்
தினம் தினம் பிரச்சனைகளுக்காக
பலியாக்கப்படும் இடம்.
மாலை பொழுது
உலகத்தையே மறந்து சிந்தனையை
துரத்திக்கொண்டு ஓடும் நேரம்.
நள்ளிரவு ?
சொர்கத்துக்கு செல்வதாக நினைத்து
மீன்டும் போர்களத்துக்கு அழைத்துச்செல்லும்
மாயப்பாதை.

என் வாழ்க்கை நகர்கிறது இப்படி உங்களுக்கு எப்படி ?

என் மீது கிறுக்கப் பட்ட வார்த்தைகளில்
அர்த்தம் புரியாத என்
கல்லூரி நாட்களே அழகானவை

கல்லூரி நாட்கள்
கரும் பலகையில் கிறுக்கப்பட்ட
வெள்ளை எழுத்துக்கள் அல்ல
கருங்கற்களில் செதுக்க
பட்ட காவியம்

அதுவே என் நினைவில் புதைக்க பட்டுள்ளது
ஆலமரத்தின் வேர்களை காட்டிலும்
நினைவலையில் சுனாமியை விட

உயரமாய் பாய்கிறது

நெளியும் புழுக் கூட்டங்களாக கல்லூரியில்
நுழைந்த நாங்கள்
பல வண்ண பட்டாம்பூச்சிகளாய் மாறி

பரந்த நாட்கள் - வானவில்லின்
சுவடுகள் போல
நினைவில் இன்றும் உள்ளது


பூக்கள் வசந்த காலத்தில் தான் மலரும்

ஆனால் கல்லூரி நாட்களை நினைத்தால்

அனைத்து நாட்களுமே வசந்த காலம் தான் !

இழந்ததை நினைத்து வருந்தும் பொழுது
இருப்பதை மறந்தேன்,
இருப்பதை நினைத்து சிரிக்கும் பொழுது
சுற்றத்தை சேர்க்க மறந்தேன்.
சுற்றத்துடன் சேர்ந்த பின்பு
மொத்தமும் இழந்தேன் ..
இழந்தது பணமா நிம்மதியா ?

நான் சென்ற பாதையிலே
கற்களும் இல்லை முட்களும் இல்லை
ஏனோ என்னால் முன்னேற முடியவில்லை
பின்பே தெரிந்தது அது உன் அன்பை விட்டு
விலகி செல்லும் பாதை என்று

தோல்வியின் மடியில் தவழ்ந்தவன் நான்.
உன் விழிகளை பார்த்த பின்பு
வாழ்வில் மகிழ்ச்சியை உணர்ந்தேன்.
உன்னோடு பழகிய நாட்களில்
வெற்றியின் சுவையை ருசித்தேன்,
இப்போதோ மீண்டும் தோழ்வியின் புதல்வனானேன்
நீ என்னை விலகிய பிறகு.

உன் மனதை படிக்க நினைத்தேன் நான்
ஆனால் இறுதியில்
உன் மணப்பத்திரிகையை தான் படிக்க முடிந்தது
இது தான் நீ எனக்கு தரும்
பரிசோ ?

உலக மக்களின் மகிழ்ச்சியை கான இரு கண்கள்
நற்செய்தியை கேட்டு உணர இரு செவிகள்
எவரையும் புண் படித்து பேசாத அமைதியான வாய்
இன்றே பூத்த பூவை விட ஒரு மென்மையான இதயம்
இவையனைத்தும் படைத்தவன் இறைவன் - இவை இருக்க
இந்த சிறிய மூலையில் தீய சிந்தனை உருவாக்கும் என்னத்தை
படைத்தது ஏனோ ?
அவன் படைப்பு சரியா ?

நிலவுக்கு ஒளி,

இளநீருக்கு சுவை,

மலருக்கு நறுமணம்,

இவை அணைத்தும் - பாருக்கே தெரிந்தவுன்மை!

உனக்குள் என்ன ?

இன்று முதல் உணர்ந்து - செயல் படு

சுவாசிக்க என்றுமே நமக்கு தடையில்லை
சிந்திக்க என்றுமே நமக்கு தடையில்லை
இப்படி இருக்க
நாம் நம்முடைய தலைவர்களின் தியாகத்தை
உணற ஒரு தனி தினம் - --- சுதந்திரம் ?

இரவுபோய் மீன்டும் தோன்றும் சுரியனல்ல நீ
விடியலில் இறக்கும் ஈசலுமல்ல நீ
பனிரெண்டு வருடத்திற்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சியுமல்ல நீ
நீ தோன்றியது எதற்கு என்பதை அறிந்து,
- இன்றுமுதல் செயல்படு

உனக்கு ஓய்வே இல்லையா ?
எப்பொழுதும் ஓடிக்கொண்டே இருக்கிறாய்
என் சிந்தனையில் - காதலி

உனக்கு ஓய்வே இல்லையா ?
எப்பொழுதும் ஓடிக்கொண்டே இருக்கிறாய்
என் சிந்தனையே - சிந்தனை

Subscribe to: Posts (Atom)