இடம் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம்
நட்சத்திர பட்டாளம் அணியின் தலைவர்
அது நம்ம கேப்டன் ‘கேப்டன்’ தாங்க...
சில பெயர் தெரிந்த மசாலா நடிகைகள் குவிந்த அணி
நம்ம கேப்டன் அணி.

எதிர் அணி. நம்ம வம்பு அணிங்க
நயன் கூட இருக்கார்... ஏங்க இப்புடி யோசிக்கிறீஙக
நம்ம கிரிக்கெட் அணி முன்னாள் விக்கெட் கீப்பர்
நயன் மொங்கியா வ சொன்னேன்.. இந்த போட்டிக்கு ஆங்கில கமெண்ட்டேடரா இருக்கார்...


வம்பு அணி நிர்ணயிக்கபட்ட 20 ஒவெர் ல..(இப்ப T20 தான் ஃபேமஸ்)
100 ரன் அடிச்சிருச்சு.. கேப்டன் அணில கடைசி விக்கெட் ஜோடி.. கேப்டன் நிக்கிறார்..
'அவரு நாட்ட மட்டும் இல்ல அணியவும் காப்பாத்துவார்'.


ரெண்டு பந்துக்கு 12 ரன்க்ள் எடுக்கனுங்கற வெற்றி இலக்கு
கேப்டனே சந்திக்கிறார். வம்பு அணி தலைவர் (யார் ன்னு நான் வேற சொல்லனுமா) வீசுறார்.வீசிய பந்து கேப்டனுக்கே சவாலா இருந்திச்சு..
கேப்டனால தொட முடியல...


கடைசி பந்து.. வீசிட்டார்..
ஒவ்ர் ஸ்டெப் ம் ஆகல. நோ பால் இல்ல. ஃப்ரி ஹிட்டும் இல்ல
ஆணா நம்ம கேப்டன் அணி வெற்றி பெறுகிறது .
..
எப்படி....
...
..
..
ரொம்ப யோசிக்கிறீங்களா..
போட்ட ஃபுல் டாஸ் பால கேப்டன் அடிச்சதுல பால் ரெண்டா ஒடஞ்சி
லெஃப்ட் ல ஒன்னு ரைட் ல ஒன்னு
பௌண்டரிக்கு வெளிய...


இதை பார்த்து அம்பயர் மிரண்டு போய்ட்டாரு. ரெண்டு சிக்ஸ். 12 ரன் குடுத்தாரு.வம்பு அணி பயங்கர கோவத்துல அம்பயர அடிக்க போனப்ப
அம்பயர் சொன்னார்.


பதிவ படிக்கிறவங்களுக்கும் ...வம்பு அணிக்கும்
இந்த மெசேஜ்..
இன்னக்கி ஏப்ரல் ஒன்னுங்க
இந்த மாதிரி ஆட்டத்துல மட்டும் இல்ல...
எல்லாத்துலயும் எப்படியும் ஏமாத்துவாங்க..
ஜாக்கிரதையா இருங்கன்னு


சோ டேக் இட் ஈசிங்க..


பதிவ படிச்சிட்டு மட்டும் போகாதீங்க.
உங்க கருத்தை பதிச்சுட்டுபோங்க

அன்று பரிட்சையில் பதில்களை
எழுத நினைத்தேன்
வார்த்தைகள் கிடைக்கவில்லை.
கற்பனை குதிரை மட்டுமே
மனதில் ஓடியது.
பரிட்சையில் எழுதமுடியவில்லை...
தவறிவிட்டேன்...
இன்று பதிவிலே எழுத நினைக்கிறேன்
வார்த்தைகள் கிடைக்கவில்லை.
இது ஒன்றும் புதிதல்ல.
ஆனால் மனதில் ஓடிய
கற்பனை குதிரையின் சுவடுகளைக்கூட
என்னால் கண்டுபிடிக்க இயலவில்லை..
பதிவிலே தவற மனமில்லை..
தேடிக் கொண்டே இருக்கிறேன்
தேடிய வார்த்தைகள் கிடைக்குமா ?

ஐம்பதாவது பதிவுங்க இது
பதிவ படிச்சிட்டு மட்டும் போகாதீங்க.
உங்க கருத்தை பதிச்சுட்டுபோங்க

பாட்டி ஆசையாய் அழைத்தாள்
கதை சொல்ல...
பள்ளியில் இருந்து வந்த பேரனுக்கு.


அவனுக்கோ ஒரே பசி, வழியில் கண்ட மெது வடை
மீது இருந்த அந்த ஆசை இன்னும்
மனதை விட்டு நீங்கவில்லை.
அம்மாவிடம் ஓடிப்போய்
வடை வேண்டும் என்று கேட்டான்...

எண்ணெய் பதார்த்தம் கெடுதி என்று சொன்னாள்.
அவன் அழத் தொடங்கினான்.
பாட்டி தான் வடை சுட்டுத்தருவதாக
சொல்ல. குழந்தையின் ஆசையை கெடுக்க
மனமில்லாமல்.மாவை பிசைய
தொடங்கினாள் அம்மா..

எண்ணெய் கொதித்து கொண்டிருந்ததால்
அவனை அங்கிருந்து போக
சொன்னாள்..அவனோ ஒரு வடை போடுவதை
பார்த்துக்கொண்டே இருந்தான்.
வடை சுட்டு கொண்டிருந்த பாட்டி அவனை அழைத்து
நீண்ட நாளாக  அவன் கேட்டுக்கொண்டிருந்த
சொர்க்க நரக கதை சொல்லஆரம்பித்தாள்.

பாட்டி கதையில் தவறு செய்தவர்களை
 நரகத்தில் வடை சுடுவதை போல் என்னெயில்
சுட்டெடுத்து பூதங்கள்
உணவாக தந்துவிடுவார்கள் என்றாள்.

எண்ணெயில் கொதிக்க வைத்த பதார்த்தம்
கெட்டவை என்றும். நரகத்திழுள்ள
பூதங்கள் மட்டுமே
உணவாக சாப்பிடும் என்று
அதனால் தான் அம்மா எண்ணெயில்
சுட்ட பதார்த்தம் கெட்டது என்று
சொன்னாள் என்று நினைத்து
பயத்தில் நடுங்க ஆரம்பித்தான்.

அம்மா வடைகளை அவனுக்கு
ஆசையாய் ஊட்ட நினைத்த
போது..அவன் தான் எண்ணெயில்
சுட்ட சாப்பாட்டை தின்பதனால்
தானும் பூதமாக மாறிவிடுவோம்
என்ற பயத்தில் வடைகளை
கையில் எடுத்து வீட்டை விட்டு
வெளியே ஓடினான்..

என்ன செய்யப்போறான்னே தெரியலயா?

பாட்டி சுட்ட வடையாச்சே
அவன் தூக்கிப்போட
ஒரு காக்கா தூக்கிட்டு போயிருச்சி..

எத்தனை சர்ட்டிஃபிகேசன் பன்னிருந்தும்
இன்னும் ப்ராஜெக்ட் கிடைக்க மாட்டிங்குது..
நானும் எத்தனை கம்பெனிக்கு முயற்சி 
செய்தும் எங்க இருந்தும் ஒரு இ-மெயில்
கால் கூட இன்னும் வரல

நான் தினம் எனக்கு வர 
ஃபார்வெர்ட் இ-மெயில் எல்லாத்தையும் 
படிக்கிறத மட்டுமே  முழு நேர வேலையா போச்சு.

இந்த வாரத்துலயாவது பென்ச்லயிருந்து
எதாவது ஒரு  ப்ராஜெக்ட்ல போயிரனும்..

இப்ப இருக்கும் நிலவரத்த பார்த்தா 
ப்ராஜெக்ட் இல்லைன்னா வேலைய விட்டு
தூக்கிருவாங்க போல..

இந்த வாரக்கடைசிக்கு என்ன பன்னலாங்குர
யோசனை கூட இன்னும் வரல ஏன்னா இன்னைக்குதான்
திங்கள் கிழமை.. 

சரியா காலை 10:30 மணியாகுது
ஒரு சின்ன காஃபி ப்ரேக் போய்ட்டு வந்தரலாம்..
யாராவது கூட வராங்களான்னு போய் கேக்குறேன் ..யாருமே வரல.

ஒரு இன்கம்மிங் ..லோக்கல் நம்பர்..
மச்சான்...... நீயா..சொல்லு..
கேள்விப்பட்டியா,,, நிறைய கம்பனில 
வேலைய விட்டு தூக்குறாங்கன்னு ஆரம்மிச்சி.
ஒரு அரைமணி நேரம்..

11:00 மணியாயிருச்சி இன்னும் எவன் கிட்ட
இருந்தும் ஒரு இ-மைல் கூட வரல..
இதோ ஒன்னு..

கார்பரேட் ஹெச் ஆர்
இந்த வார கடைசிக்குள்  எந்த ஒரு 
ஃப்ராஜெக்ட் கிடைக்க வில்லை என்ற தருனத்தில்
கம்பனி நலன் கருதி. உங்களை வேலயை
விட்டு  நீக்க வேண்டியிருக்கும்..

இப்படிக்கு உங்கள் 
கார்பரேட் ஹெச் ஆர்
 
தலையே சுத்துரமாதிரி இருக்கே..
என்ன பன்றதுன்னே தெரியலையே..
இப்ப வேலை போச்சுன்னா,கிடைக்க நாள் ஆகுமே..
என்ன பன்றது ,..யார் கிட்டயாவது சொல்லலாமா ?
யார் கிட்டயாவது இதே மாதிரி இ-மெயில் வந்துருக்கன்னு
கேக்கலாமா?

யார்கிட்டயும் சொல்லாம அமைதியா இருப்போம்
வேர யாருக்காவது இந்த மாதிரி  இ-மெயில் வந்துருக்குன்னு 
சொல்லராங்கலான்னு பாப்போம்..

சரியா 12:30 மணி..மதிய சப்பாடுக்கு
எல்லா பென்ச் ஃப்ரண்ட்ஸ் எல்லாத்தோடையும் போலாம்..
ஏதாவது தெரிய வருதான்னு பாப்போம்..
1:45 மணி ஆயிருச்சி எவனுமே அந்த மாதிரி இ-மெயில்
வந்துருக்க மாதிரி சொல்லவேயில்லையே ...

அப்ப நம்ம மட்டும் தான் அந்த லிஸ்ட்ல இருக்கோம் போல..
ஐயோ போச்சே..
என்ன காப்பாத்திக்க வழியே இல்லையா ?
இன்னக்கி ஏப்பரல் ஒன்னு ,,இது அதுக்காக வந்த  ஏதாவத் ஒரு
ஃபார்வெர்ட் இ-மைலா இருக்குமோ..?

சாப்பாடு முடிச்சிட்டு போன உடனே, இ-மெயில்
இன்னும் ஒரு முரை பாக்கனும்...
சீக்கிரமா போய் பாக்கனும்..
அப்பதான் நிம்மதியா இருக்கும்...
அங்க இருந்த யார்க்கிட்டயும் சொல்லாம ஒரே
ஓட்டம் .ஆஃபிஸ் லைப்ரரி கம்ப்பூட்டர்...சீட்ட பாத்து..

யோவ் யோவ்..அந்த ஆள புடிப்பா..
காலையிலேயே 8:45 க்கே இப்படி 
பஸ் ஃபூட் போர்டுல தூங்கி
விழுந்து கிழுந்து சாக போரடா ..
மேல ஏரி வா... சாவுகிராக்கி..

சய்,,,,இவ்வலவும் ஃபூட் போர்ட்ல
தொங்கும் போது வந்த கனவு போல..
ஆஃபிஸ் பஸ்ல தூங்கி ...இன்னைக்கு மிஸ் பன்னிட்டு 
இந்த கூட்டத்துல கூட ஒரு தூக்கம் அதுல ஒரு 
கனவு...

ஆஃபிஸ்க்கு போன உடனே எதுக்கும் இ-மெயில்
பார்த்தா தான் கனவா,,இல்லையான்னு 
தெரியும்....

என் வாழ்க்கை வரண்டு கொண்டே போகிறது...
என்னுடைய  இறுதி நாட்களை தினமும் எண்ணிக் கொண்டிருக்கிறேன்
என்ற சிந்தனை எனக்குள் பெருகிகொண்டே போகிறது.
இத்தனை நாள் எனக்குள் இருந்த சக்தியைக் கொண்டுஓடிவிட்டேன்
இனி எனக்குள்  அந்த நம்பிக்கையில்லை.இக்கடிதத்தை நான் 
எழுதி முடிக்கும் பொழுது என் உயிர் என்னை விட்டு பிரிந்துவிடும்.
நவீன யுகத் தேவைக்கு  என்னை ஆயுத்தம் செய்து கொள்ளாததால்
இந்நிலைக்கு நான் தள்ளப்பட்டிருக்கிறேன்.
என்னைப் போலிருக்கும் பலருக்கு நான் ஒரு பாடமாய்
இருப்பேன் என்ற நினைவில் இந்த கடிதத்தை 
எவ்வித வருத்தமின்றி முடிக்கிறேன்.
எனக்காக யாரும் வருந்த வேண்டாம்.இம்முடிவை 
நான் சந்திக்க தயாராயிருக்கிறேன்..

இப்படிக்கு 
என் பழைய பேனாவின் கடைசி சொட்டு மை 
(நாளை முதல் புது பேனா)    

உன்னை எத்தனை முறை
காப்பாற்றினாலும் ..
என்னை நீ புகழ்ந்ததில்லை
நானும் வருந்தியதில்லை
என்றோ ஒரு  நாள் நான் 
உன்னை செல்லமாய் கடித்ததற்கு..
அன்றே என்னை தூக்கி எறிகிறாய்..
     ------வருத்ததுடன் செருப்பு   

மாற்றம் என்னை தினம்
துறத்துகிறது

நேற்றைப்போல் நான் இன்றில்லை
உருவத்தில் மட்டுமல்ல
உள்ளத்தில் கூட.

உள்ளத்தை நானும் மற்றவரும்
உணர நாட்கள் தேவை ..

எனக்குத்தேவை 
புதிய முகம்,,
என் உள்ளத்தை வெளிகாட்டாத முகம்...
முகமுடியல்ல..

ஓயாது ஓடும் 
இந்த நாட்களுக்கு தேவை..

தீராது தோன்றும் என்
குழப்பங்களுக்கு தேவை ... 

தேவையில்லாத என் 
சிந்தனைகளுக்கு தேவை...

கற்பனையும் கனவையும்
நிஜம்மென்று நினைக்கும் என் 
மனதிற்கு தேவை 

இயற்க்கையின் படைப்பில் 
எந்த ஒரு பொருளையும்
மீண்டும் மீண்டும் பயன்படுத்தும்
பொழுது அதன் தன்மை
தேய்கிறது,
மனித மூளையை 
தவிர..
மீண்டும் மீண்டும் பயன்படுத்தும்
பொழுது மட்டுமே 
சிறப்பாக செயல் படுகிறது..
சில நேரங்களில் நாம்
இயற்க்கையை எதிர்த்து போராட
வேண்டியுள்ளது

Subscribe to: Posts (Atom)