பாட்டி ஆசையாய் அழைத்தாள்
கதை சொல்ல...
பள்ளியில் இருந்து வந்த பேரனுக்கு.


அவனுக்கோ ஒரே பசி, வழியில் கண்ட மெது வடை
மீது இருந்த அந்த ஆசை இன்னும்
மனதை விட்டு நீங்கவில்லை.
அம்மாவிடம் ஓடிப்போய்
வடை வேண்டும் என்று கேட்டான்...

எண்ணெய் பதார்த்தம் கெடுதி என்று சொன்னாள்.
அவன் அழத் தொடங்கினான்.
பாட்டி தான் வடை சுட்டுத்தருவதாக
சொல்ல. குழந்தையின் ஆசையை கெடுக்க
மனமில்லாமல்.மாவை பிசைய
தொடங்கினாள் அம்மா..

எண்ணெய் கொதித்து கொண்டிருந்ததால்
அவனை அங்கிருந்து போக
சொன்னாள்..அவனோ ஒரு வடை போடுவதை
பார்த்துக்கொண்டே இருந்தான்.
வடை சுட்டு கொண்டிருந்த பாட்டி அவனை அழைத்து
நீண்ட நாளாக  அவன் கேட்டுக்கொண்டிருந்த
சொர்க்க நரக கதை சொல்லஆரம்பித்தாள்.

பாட்டி கதையில் தவறு செய்தவர்களை
 நரகத்தில் வடை சுடுவதை போல் என்னெயில்
சுட்டெடுத்து பூதங்கள்
உணவாக தந்துவிடுவார்கள் என்றாள்.

எண்ணெயில் கொதிக்க வைத்த பதார்த்தம்
கெட்டவை என்றும். நரகத்திழுள்ள
பூதங்கள் மட்டுமே
உணவாக சாப்பிடும் என்று
அதனால் தான் அம்மா எண்ணெயில்
சுட்ட பதார்த்தம் கெட்டது என்று
சொன்னாள் என்று நினைத்து
பயத்தில் நடுங்க ஆரம்பித்தான்.

அம்மா வடைகளை அவனுக்கு
ஆசையாய் ஊட்ட நினைத்த
போது..அவன் தான் எண்ணெயில்
சுட்ட சாப்பாட்டை தின்பதனால்
தானும் பூதமாக மாறிவிடுவோம்
என்ற பயத்தில் வடைகளை
கையில் எடுத்து வீட்டை விட்டு
வெளியே ஓடினான்..

என்ன செய்யப்போறான்னே தெரியலயா?

பாட்டி சுட்ட வடையாச்சே
அவன் தூக்கிப்போட
ஒரு காக்கா தூக்கிட்டு போயிருச்சி..

2 comments

  1. தேவன் மாயம்  

    அம்மா எண்ணெயில்
    சுட்ட பதார்த்தம் கெட்டது என்று
    சொன்னாள் என்று நினைத்து
    பயத்தில் நடுங்க ஆரம்பித்தான்.///

    நல்ல கற்பனைக் கதை!

  2. Subhashini  

    semma kadha.. chance a illa :D

Post a Comment

Subscribe to: Post Comments (Atom)