என் வாழ்க்கை வரண்டு கொண்டே போகிறது...
என்னுடைய  இறுதி நாட்களை தினமும் எண்ணிக் கொண்டிருக்கிறேன்
என்ற சிந்தனை எனக்குள் பெருகிகொண்டே போகிறது.
இத்தனை நாள் எனக்குள் இருந்த சக்தியைக் கொண்டுஓடிவிட்டேன்
இனி எனக்குள்  அந்த நம்பிக்கையில்லை.இக்கடிதத்தை நான் 
எழுதி முடிக்கும் பொழுது என் உயிர் என்னை விட்டு பிரிந்துவிடும்.
நவீன யுகத் தேவைக்கு  என்னை ஆயுத்தம் செய்து கொள்ளாததால்
இந்நிலைக்கு நான் தள்ளப்பட்டிருக்கிறேன்.
என்னைப் போலிருக்கும் பலருக்கு நான் ஒரு பாடமாய்
இருப்பேன் என்ற நினைவில் இந்த கடிதத்தை 
எவ்வித வருத்தமின்றி முடிக்கிறேன்.
எனக்காக யாரும் வருந்த வேண்டாம்.இம்முடிவை 
நான் சந்திக்க தயாராயிருக்கிறேன்..

இப்படிக்கு 
என் பழைய பேனாவின் கடைசி சொட்டு மை 
(நாளை முதல் புது பேனா)    

0 comments

Post a Comment

Subscribe to: Post Comments (Atom)