எத்தனை சர்ட்டிஃபிகேசன் பன்னிருந்தும்
இன்னும் ப்ராஜெக்ட் கிடைக்க மாட்டிங்குது..
நானும் எத்தனை கம்பெனிக்கு முயற்சி 
செய்தும் எங்க இருந்தும் ஒரு இ-மெயில்
கால் கூட இன்னும் வரல

நான் தினம் எனக்கு வர 
ஃபார்வெர்ட் இ-மெயில் எல்லாத்தையும் 
படிக்கிறத மட்டுமே  முழு நேர வேலையா போச்சு.

இந்த வாரத்துலயாவது பென்ச்லயிருந்து
எதாவது ஒரு  ப்ராஜெக்ட்ல போயிரனும்..

இப்ப இருக்கும் நிலவரத்த பார்த்தா 
ப்ராஜெக்ட் இல்லைன்னா வேலைய விட்டு
தூக்கிருவாங்க போல..

இந்த வாரக்கடைசிக்கு என்ன பன்னலாங்குர
யோசனை கூட இன்னும் வரல ஏன்னா இன்னைக்குதான்
திங்கள் கிழமை.. 

சரியா காலை 10:30 மணியாகுது
ஒரு சின்ன காஃபி ப்ரேக் போய்ட்டு வந்தரலாம்..
யாராவது கூட வராங்களான்னு போய் கேக்குறேன் ..யாருமே வரல.

ஒரு இன்கம்மிங் ..லோக்கல் நம்பர்..
மச்சான்...... நீயா..சொல்லு..
கேள்விப்பட்டியா,,, நிறைய கம்பனில 
வேலைய விட்டு தூக்குறாங்கன்னு ஆரம்மிச்சி.
ஒரு அரைமணி நேரம்..

11:00 மணியாயிருச்சி இன்னும் எவன் கிட்ட
இருந்தும் ஒரு இ-மைல் கூட வரல..
இதோ ஒன்னு..

கார்பரேட் ஹெச் ஆர்
இந்த வார கடைசிக்குள்  எந்த ஒரு 
ஃப்ராஜெக்ட் கிடைக்க வில்லை என்ற தருனத்தில்
கம்பனி நலன் கருதி. உங்களை வேலயை
விட்டு  நீக்க வேண்டியிருக்கும்..

இப்படிக்கு உங்கள் 
கார்பரேட் ஹெச் ஆர்
 
தலையே சுத்துரமாதிரி இருக்கே..
என்ன பன்றதுன்னே தெரியலையே..
இப்ப வேலை போச்சுன்னா,கிடைக்க நாள் ஆகுமே..
என்ன பன்றது ,..யார் கிட்டயாவது சொல்லலாமா ?
யார் கிட்டயாவது இதே மாதிரி இ-மெயில் வந்துருக்கன்னு
கேக்கலாமா?

யார்கிட்டயும் சொல்லாம அமைதியா இருப்போம்
வேர யாருக்காவது இந்த மாதிரி  இ-மெயில் வந்துருக்குன்னு 
சொல்லராங்கலான்னு பாப்போம்..

சரியா 12:30 மணி..மதிய சப்பாடுக்கு
எல்லா பென்ச் ஃப்ரண்ட்ஸ் எல்லாத்தோடையும் போலாம்..
ஏதாவது தெரிய வருதான்னு பாப்போம்..
1:45 மணி ஆயிருச்சி எவனுமே அந்த மாதிரி இ-மெயில்
வந்துருக்க மாதிரி சொல்லவேயில்லையே ...

அப்ப நம்ம மட்டும் தான் அந்த லிஸ்ட்ல இருக்கோம் போல..
ஐயோ போச்சே..
என்ன காப்பாத்திக்க வழியே இல்லையா ?
இன்னக்கி ஏப்பரல் ஒன்னு ,,இது அதுக்காக வந்த  ஏதாவத் ஒரு
ஃபார்வெர்ட் இ-மைலா இருக்குமோ..?

சாப்பாடு முடிச்சிட்டு போன உடனே, இ-மெயில்
இன்னும் ஒரு முரை பாக்கனும்...
சீக்கிரமா போய் பாக்கனும்..
அப்பதான் நிம்மதியா இருக்கும்...
அங்க இருந்த யார்க்கிட்டயும் சொல்லாம ஒரே
ஓட்டம் .ஆஃபிஸ் லைப்ரரி கம்ப்பூட்டர்...சீட்ட பாத்து..

யோவ் யோவ்..அந்த ஆள புடிப்பா..
காலையிலேயே 8:45 க்கே இப்படி 
பஸ் ஃபூட் போர்டுல தூங்கி
விழுந்து கிழுந்து சாக போரடா ..
மேல ஏரி வா... சாவுகிராக்கி..

சய்,,,,இவ்வலவும் ஃபூட் போர்ட்ல
தொங்கும் போது வந்த கனவு போல..
ஆஃபிஸ் பஸ்ல தூங்கி ...இன்னைக்கு மிஸ் பன்னிட்டு 
இந்த கூட்டத்துல கூட ஒரு தூக்கம் அதுல ஒரு 
கனவு...

ஆஃபிஸ்க்கு போன உடனே எதுக்கும் இ-மெயில்
பார்த்தா தான் கனவா,,இல்லையான்னு 
தெரியும்....

0 comments

Post a Comment

Subscribe to: Post Comments (Atom)