பல வருடங்களாய்அடைப்பட்டு.சாவியில்லாத பெட்டிக்குள்ளிருந்துவெளிவரத் துடிக்கும் புதையல் தான் காதல்...-சாவி கிடைத்தவர்கள் காதலைத் (புதையலைத்)தொளைத்துவிடுகிறார்கள், -சாவி இல்லாதவர்கள்புதையலைத் தேடுகிறார்கள்.
என்றுமே
வெள்ளையாய் கண்ட நிலா..
இன்று எழுந்த பொழுது..
கண்ணேதிரே
கையருகே..
உடனே
என் நினைவெல்லாம்
அதில் நிறம் பூச ஆசை..
கையருகே என்
கண்களை கூசிய
நட்சத்திரங்கள்..
கற்களை தூக்கி எறிவதய் போல்..
எறிந்து விளையாட
ஆசை..
திடீரென என்னுள் ஒரு மாற்றம்..
நிலவு கையருகே..இருக்கிறதே..
நான் சொர்கத்தில் இருக்கிறேனா..
இல்லை வானே கீழ்
இறங்கியதா..
யோசித்த பொழுது,,மணி
அடித்தது,..பரிட்சை நேரமும்
முடிந்த்து..
--- பதில் தேர்வின் முடிவில்
ஊருக்கே கொடுத்தது வெளிச்சம்
வெட்டியான் வாழ்க்கைக்கு
மட்டும் இருட்டு...
மின்மயானம்
பொறுமை
விதைக்கு மட்டும் தான் சொந்தம்
என்று நினைத்தேன்.
உன் பதிலுக்காக நான் காத்திருந்த பொழுது
தெரிந்தது அது பொய்யென்று
ப்ராஜெக்ட் லீட்லயிருந்து...டாவ் அடிக்குர பெண் வரை
இது பொருந்தும்.
நேரமிருந்தா கருத்த சொல்லிட்டு போங்க...