எத்தனை இனிய தேனை
சேகரிக்கும் தேனீக்கு
என்றுமே அந்த தேன் சொந்தமில்லை
எத்தனை அழகாய் தான்
வசிக்க கட்டும் புற்றுக்கு,கரையான்
என்றுமே சொந்தமில்லை
எத்தனை காலமாய் உழைத்து
லட்சங்களாய் சேர்க்கும் பணத்திற்கு
மனிதன் என்றுமே சொந்தமில்லை
எதை நாம் சேர்க்க நினைக்கிறோமோ
அது நமக்கு
சொந்தமற்று போகிறது...
புன்னகையை சேர்க்க நினைப்பவனுக்கு
மட்டுமே
பகைமை சொந்தமற்று போகிறது.
பதிவ படிச்சிட்டு மட்டும் போகாதீங்க.
உங்க கருத்தை பதிச்சுட்டுபோங்க
Thursday, April 02, 2009 11:35:00 AM
சிந்தனை கவிதை மிக்க அருமை நண்பரே
Thursday, April 02, 2009 4:34:00 PM
// எத்தனை காலமாய் உழைத்துலட்சங்களாய் சேர்க்கும் பணத்திற்கு மனிதன் என்றுமே சொந்தமில்லை
எதை நாம் சேர்க்க நினைக்கிறோமோஅது நமக்கு சொந்தமற்று போகிறது... //
அருமையாகச் சொன்னீர்கள்..
// புன்னகையை சேர்க்க நினைப்பவனுக்குமட்டுமேபகைமை சொந்தமற்று போகிறது.//
கவிதையின் முத்தாய்ப்பான வரிகள் இது..
Thursday, April 02, 2009 6:56:00 PM
மிக்க நன்றி இனியவன்,இராகவன்
Tuesday, April 14, 2009 2:20:00 AM
இன்னும் இன்னும் நிறைய எதிர்பாக்குறேன் உங்ககிட்ட இருந்து..
கலக்குங்க பாஸு........
- நாய்குட்டி