சட்டை கிழிங்சிருச்சி புது சட்டை போட்டிருக்கிறேன்
...இப்போ புது ‘template' பயன் படுத்துறேன் அத தான் அப்புடி
சொன்னேன்..
போன முறை மொக்கை..இன்னைக்கு
அந்த மாதிரியில்லை
உன் மேனியை அழகாக்க..
என் மேனியை அழுக்காக்கினாய்..
எனக்கு மாற்றம் கிடைத்தது
நானும் கரைந்தேன்
பாவம் நீ மட்டும் இன்னும்
மாறவில்லையே..
---- நறுமனத்துடன் சோப்பு
நீ விட்ட குறட்டையின்
சத்தம் என் காதைக் கிழித்தது..
நான் வருந்தவில்லை.
ஆனால் நான் விட்ட கொட்டாவி
சத்தத்தில் நீ தூக்கம்
கலைந்து என் தலைதட்ட
நினைப்பது என்ன நியாயம்
... அடிவாங்கும் அலாரம்
பதிவ படிச்சிட்டு மட்டும் போகாதீங்க.
உங்க கருத்தை பதிச்சுட்டுபோங்க.
உங்க கருத்தை பதிச்சுட்டுபோங்க.