இது போதாத காலம்ன்னு
நினைக்கிறேன்.
ஆஃபிஸ் பி . எல் லயிருந்து
பன்னி வரை எதை பாத்தாலும் இப்ப
எல்லாம் பயமாயிருக்கு...


தெரியாம கூட தும்ம முடியுல.
தும்மின பின்னாடி ஊருல எல்லாபயலும்
நம்மலயே பாக்குறாங்கய்யா..


ஒரு பேச்சிக்கு கூட சின்ன
பசங்க மாதிரி பன்னி நாய்ன்னு
கூட இனி சொல்ல முடியாது போல.
சகல ஜனங்களுக்கும் சொல்ல வர மெசேஜ்
இனி பேச்சுக்குகூட எதாவது மிருகம்
பெயர சொல்லிடாதீங்க...


முன்னாடி கோழி..
இப்ப பன்னி..
அடுத்து எது ரெடி ஆகுதுன்னே தெரியுல,....


தும்மல் வரமாதிரி இருக்கு..
அப்புறமா மீட் பண்ண்லாம்..


பதிவ படிச்சிட்டு மட்டும் போகாதீங்க.
உங்க கருத்தை பதிச்சுட்டுபோங்க.

நான் போர்களங்களை சந்தித்ததில்லை
இருந்து,ம் என் மீது 
பட்ட வெட்டுகள் கணக்கில்லை
என் மீது குத்தப்பட்ட ஈட்டிகள்
எண்ணில் இல்லை

நான் பட்ட அடிகள்
மத்தலங்கள் கூட தாங்கியதில்லை 
நான் சுவாசித்த அனல் காற்றினை
எவறாலும் தாங்க முடியாது

வளர்ச்சி இல்லாத நான் உன்
உடள் பருமத்தின் மாற்றத்திற்கு
ஏர்த்த வாரு மாறத்தெரியவில்லை
--- தொப்பையை மறைக்க முடியாத என் சட்டை 

இராம்போ,இராக்கி ..டெர்மினேட்டர்..இதெல்லாம் ஒரு சீக்குவள்..அதே போலத்தான்..இதுவும்...

எப்பவுமே ஒரே மாதிரி எழுதுனா நல்லா இருக்காது..
ஆனாழும் இந்த ஊருங்களப்பத்தி உங்க எல்லாத்துக்கும் சொல்லிட்டு
விட்டுடலாம்னு நினைக்கிறேன்..

இது ஒரு ‘quiz' போட்டியில்ல.ஆனா பதில்
படிச்ச பின்னாடி ஃபீல் பன்னக்கூடாது
’சேம் ப்லட்...’

1) இந்த ஊர்ல இருக்கும் மக்கள் எல்லாம் கொஞ்சம்
பைத்தியும் பிடிச்சமாதிரி இருப்பாங்க ?
....
.....
.....
 2)இந்த ஊர்ல இருக்கும் மக்கள் எல்லாம் கொஞ்சம்
முட்டாள் தனமா நடந்துக்குவாங்க ?
....
.....
.....

3)இந்த ஊர்ல இருக்கும் மக்கள் எல்லாம்  நம்ம
ஊர் மக்கள் மாதிரியே மாட்டுக்கு முக்கியத்துவம் 
தருவாங்க? 
....
.....
.....

4) இந்த ஊர் நம்ம சர்தாருக்கு ரொம்ப பிடிக்கும் ?
நம்ம நாட்ல இல்லை :0
....
.....
.....
5)இந்த ஊர்ல இருக்கும் மக்கள் எல்லாம்  வெயிலுக்கு
பயப்பட மாட்டாங்க? 
....
.....
.....

6)இந்த ஊர்ல இருக்கும் மக்கள் யாருமேலயும்
மோத தயங்கமாட்டாங்க ?

....
.....
.....
7)இந்த ஊர்ல இருக்கும் மக்கள் காய்கறி 
வாங்க மாட்டாங்க? 
....
.....
.....
இதோ பதில்

1)’மேட்’ரிட் 

2)காட்’மண்டு’

3)மாஸ்'கவ்' (மாஸ்’cow')

4)டர்பன்

5)’கேப்’டவுன்

6)’பேங்க்'காக்

7)ஷாங்’காய்’

இனிமேல் கடி இருக்காதுங்கோ....

பதிவ படிச்சிட்டு மட்டும் போகாதீங்க.
உங்க கருத்தை பதிச்சுட்டுபோங்க. 

சட்டை கிழிங்சிருச்சி புது  சட்டை போட்டிருக்கிறேன் 
...இப்போ புது ‘template' பயன் படுத்துறேன்  அத தான் அப்புடி 
சொன்னேன்..

போன முறை மொக்கை..இன்னைக்கு 
அந்த மாதிரியில்லை

உன் மேனியை அழகாக்க..
என் மேனியை அழுக்காக்கினாய்..
எனக்கு மாற்றம் கிடைத்தது
நானும் கரைந்தேன்
பாவம் நீ மட்டும் இன்னும் 
மாறவில்லையே..
---- நறுமனத்துடன் சோப்பு


நீ விட்ட குறட்டையின்
சத்தம் என் காதைக் கிழித்தது..
நான் வருந்தவில்லை.
ஆனால் நான் விட்ட கொட்டாவி
சத்தத்தில் நீ தூக்கம்
கலைந்து என் தலைதட்ட
நினைப்பது என்ன நியாயம்
... அடிவாங்கும் அலாரம்


பதிவ படிச்சிட்டு மட்டும் போகாதீங்க.
உங்க கருத்தை பதிச்சுட்டுபோங்க.

கொஞ்சம் வித்தியாசமா பதிவ போடலாம்னு
முயற்ச்சி பன்னிருக்கேன்.
இது ஒரு ‘quiz' போட்டியில்ல.ஆனா பதில்
படிச்ச பின்னாடி ஃபீல் பன்னக்கூடாது

1)கொஞ்சம் வெயிட்டான நாடு.. (அமெரிக்கா இல்ல.. அதுக்கும் மேல..)
..
..
...

2)இந்த நாட்டோட பேர சொன்னா மத்த நாடுங்க கோபமா இருக்காங்களான்னு தெரிஞ்சக்க்லாம்.
...
..
...

3)பாசம் மிகுந்த நாடு..
...
...

4)இந்த நாட்டுல திருடங்க ரொம்ப ஈஸியா திருடுவாங்க..
....
....

5) இந்த நாட்டுல பணமே யூஸ் பண்ணமாட்டாங்க..
...
...

இதோ பதில்..

1)’கன’டா..

2)U’காண்டா’

3)'தாய்'லாந்து..

4)டர்'கீ'..

5)’செக்’ கோஸ்லோவியா..

சும்மா இருக்கிறது கஷ்டம்..அதவிட 
மொக்க போடுறது ரொம்ப கஷ்டம்

பதிவ படிச்சிட்டு மட்டும் போகாதீங்க.
உங்க கருத்தை பதிச்சுட்டுபோங்க.


எத்தனை இனிய தேனை
 சேகரிக்கும் தேனீக்கு
என்றுமே அந்த தேன் சொந்தமில்லை 

எத்தனை அழகாய் தான் 
வசிக்க  கட்டும் புற்றுக்கு,கரையான் 
என்றுமே சொந்தமில்லை

எத்தனை காலமாய் உழைத்து
லட்சங்களாய் சேர்க்கும் பணத்திற்கு 
மனிதன் என்றுமே சொந்தமில்லை

எதை நாம் சேர்க்க நினைக்கிறோமோ
அது நமக்கு 
சொந்தமற்று போகிறது... 

புன்னகையை சேர்க்க நினைப்பவனுக்கு
மட்டுமே
பகைமை சொந்தமற்று போகிறது.

பதிவ படிச்சிட்டு மட்டும் போகாதீங்க.
உங்க கருத்தை பதிச்சுட்டுபோங்க


Subscribe to: Posts (Atom)