வானவில்லில் உள்ள வண்ணங்கள்
மின்னலில் இல்லை,
இருவருமே வின்னில் தான் பிறந்தார்கள்
இருவருக்கும் வெவ்வேறு குணங்கள்
அவர்களுக்குள் சண்டை இல்லை..
சில நேரங்களில் சந்திப்பதுமில்லை.
விண்ணின் மைந்தர்களின் வாழ்க்கை இப்படி.
ஒரே மண்ணில் பிறந்து
நிறத்திலும் குணத்திலும்
பெரிய வேறுபாடு இல்லாத நம்
மண்ணின் (மனிதர்கள்)மைந்தர்கள் ..
அவர்களுள் ஏன் இத்தனை சண்டை..?
எத்தனை பாதிப்பு!
வானவில்லின் தோற்றலை ஊரெங்கும்
சிறுவர்கள் ரசிப்பதைப்போல்...
நம் இனத்தவரின்
சண்டையை ஊரெங்கும் உலகெங்கும்
வேடிக்கை காட்சியாய்
காட்டி கண்டு ரசிக்கிறது
ஒரு அரசியல் கூட்டம்...
இதை தடுக்க வழியில்லையா?
இல்லை தடுப்பவர்களில்லையா?