நித்தம் ஒரு வாதம்..
அவை முடியாத விவாதம் 
பிரமாதம் என்று நினைத்து
நாம் செய்தவையைச் பேசி பெருமிதம்..

சிந்தனைகள் அனைத்தும் வினோதம்
பிறர்சொல் கேட்காது பிடிவாதம்.
நினைத்தவை அடையாத போது வருத்தம் 
நன்பர்களை கண்டவுடன் ஆனந்தம்.

பொருத்தம் இன்றி இருக்கும் அந்த வரிகளை 
திருத்(தம்) செய்யக் கூட - தம் வேண்டும்

மொத்தம் நம் வாழ்க்கையில் தம் 
ஒன்று தேவை!
அடிக்காமல் இருக்க முடியவில்லை

பதிவ படிச்சிட்டு மட்டும் போகாதீங்க.
 உங்க கருத்தை பதிச்சுட்டுபோங்க

ஒரு சின்ன கற்பனை,முடிஞ்சா ரசிங்க
---------------------------------------------

அந்த வாட்ச் கடைக்காரருக்கு இனிப்பு
கொஞ்சம் கூடப்பிடிக்காது?

ஏன் அவருக்கு சுகரா (சர்க்கரையா ? )
அவருக்கு கடி’காரம்’ தான் பிடிக்கும்...

---------------------------------------

அவருக்கு கொஞ்சம் கூட தன்னி அடிக்கிற
பழக்கம்மில்லைன்னு சொன்னீங்க...ஆனா அவர்
மேல தன்னி அடிச்ச வாடை வருதே...

இருக்காதா அவர் பெரு சிங்கா’ரம்’ ஆச்சே

-----------------------------------
அந்த கோவில் வாசல்ல கடை வச்சிருக்கிறவர
ஏன் எல்லாரும் இந்த அடி அடிக்கிறாங்க..

பாவம் தமிழ் ஒழுங்கா எழுத வராது போல..
பக்த கோடிகள் ‘பத்தி’ இல்லாதவங்க ..பத்தி வாங்கி செல்லவும்ன்னு போர்ட்
வைக்கிறதுக்கு பதிலா..

பக்த கேடிகள் ‘புத்தி’ இல்லாதவங்க ..புத்தி வாங்கி செல்லவும்ன்னு போர்ட்
வைச்சிருகார்.

-----------------------------------------------------
ரொம்ப  கடிச்சிருந்தா.. நான் பொறுப்பில்லை 

பதிவ படிச்சிட்டு மட்டும் போகாதீங்க.
  உங்க கருத்தை பதிச்சுட்டுபோங்க

பெண்னே உன் கை தொட்டு
நான் உரச ஆசைதான்.
நீ என்னை 
தொட்டபோது 
இருந்த சுகம்...
உரசும் போது 
இருந்த சுகம்,
என் நினைவை விட்டு
மறையும்முன்..
என் வாழ்க்கை உன் கையிலே மறைகிறது..
நீயோ என்னை மறந்து..
அடுத்த ஒன்றைத் தேடுகிறாய் 
-- எரிந்த தீக்குச்சி 

ஒரு சின்ன கற்பனை,முடிஞ்சா ரசிங்க

அந்த பல் டாக்டர் போலி டாக்டர்ன்னு நினைக்கிறேன்.
அந்த ஆள் பாத்திரக்கடை வைச்சிருப்பான்னு 
நினைக்கிறேன்...

பல்லு வெள்ளையாக்க என்ன பன்னலாம்ன்னு கேட்டா
சாம்’பல்’ போட்டு தேய்ன்னு சொல்ரான்யா,
--------------------------------------------------------------------

எனக்கு ப்ராஜெக்ட்ல பல் காட்றவங்கள
பாத்தா கொஞ்சம் கூட பிடிக்காதுடா..

ஏன் எந்த ஃபிகரும் உன் கிட்ட பேசலன்னு
கடுப்பாடா? 

இல்லடா நான் சொதப்’பல்’  பத்தி சொன்னேன்

-----------------------------------------------------------------
ஒரு தாத்தா லாலா கடைக்குபோய் பக்கோடா
கேட்டார் ..பல் இருப்பவர் தான் பக்கோடா
சாப்பிட முடியும்னு சொல்லிட்டாரு..

அப்போ கப்’பல்’ சாப்பிடுமான்னு கேட்டார்.மடக்க
நம்ம ஆள் பதில் இப்புடியே பேசினா 
செப்’பல்’ தான் வரும்னுட்டார்.

-----------------------------------------------------
ரொம்ப  கடிச்சிருந்தா.. நான் பொறுப்பில்லை 

பதிவ படிச்சிட்டு மட்டும் போகாதீங்க.
  உங்க கருத்தை பதிச்சுட்டுபோங்க.

நூற்றுக்கணக்கான எழுத்துக்களிருந்து 
   ஊருவாக்கப்பட்ட 
பல்லாயிரக்கணக்கான சொற்களில் 
எந்த சொல்லை நான்
தேர்ந்தெடுத்து வரிகள்
   அமைக்க என்னுள் குழப்பம்..

அமைக்கும் வாக்கியத்தில் 
பொருள் சேர்க்க நான்
போராடும் போராட்டம்.....

அமைந்த பொருளுக்கு
ஏற்றவாறு தலைப்பு 
வைக்கமுடியாமல் தவிக்கும் தவிப்பு..

ஒவ்வொரு பதிவுக்கும் 
உங்கள் மனதை என் பக்கத்துக்கு
கவர நான் செய்யும்
யுக்திகள் நாடகங்கள்...
அப்பப்பா...
 நம்மால முடியல

எனக்கு இப்புடியெல்லாம்..இல்லைங்கோ..


  பதிவ படிச்சிட்டு மட்டும் போகாதீங்க.
  உங்க கருத்தை பதிச்சுட்டுபோங்க.

Subscribe to: Posts (Atom)