காலை பொழுது,
அலாரத்துடன் போராடும் போர்களம்!
அலுவலகம்
தினம் தினம் பிரச்சனைகளுக்காக
பலியாக்கப்படும் இடம்.
மாலை பொழுது
உலகத்தையே மறந்து சிந்தனையை
துரத்திக்கொண்டு ஓடும் நேரம்.
நள்ளிரவு ?
சொர்கத்துக்கு செல்வதாக நினைத்து
மீன்டும் போர்களத்துக்கு அழைத்துச்செல்லும்
மாயப்பாதை.

என் வாழ்க்கை நகர்கிறது இப்படி உங்களுக்கு எப்படி ?

என் மீது கிறுக்கப் பட்ட வார்த்தைகளில்
அர்த்தம் புரியாத என்
கல்லூரி நாட்களே அழகானவை

கல்லூரி நாட்கள்
கரும் பலகையில் கிறுக்கப்பட்ட
வெள்ளை எழுத்துக்கள் அல்ல
கருங்கற்களில் செதுக்க
பட்ட காவியம்

அதுவே என் நினைவில் புதைக்க பட்டுள்ளது
ஆலமரத்தின் வேர்களை காட்டிலும்
நினைவலையில் சுனாமியை விட

உயரமாய் பாய்கிறது

நெளியும் புழுக் கூட்டங்களாக கல்லூரியில்
நுழைந்த நாங்கள்
பல வண்ண பட்டாம்பூச்சிகளாய் மாறி

பரந்த நாட்கள் - வானவில்லின்
சுவடுகள் போல
நினைவில் இன்றும் உள்ளது


பூக்கள் வசந்த காலத்தில் தான் மலரும்

ஆனால் கல்லூரி நாட்களை நினைத்தால்

அனைத்து நாட்களுமே வசந்த காலம் தான் !

இழந்ததை நினைத்து வருந்தும் பொழுது
இருப்பதை மறந்தேன்,
இருப்பதை நினைத்து சிரிக்கும் பொழுது
சுற்றத்தை சேர்க்க மறந்தேன்.
சுற்றத்துடன் சேர்ந்த பின்பு
மொத்தமும் இழந்தேன் ..
இழந்தது பணமா நிம்மதியா ?

நான் சென்ற பாதையிலே
கற்களும் இல்லை முட்களும் இல்லை
ஏனோ என்னால் முன்னேற முடியவில்லை
பின்பே தெரிந்தது அது உன் அன்பை விட்டு
விலகி செல்லும் பாதை என்று

தோல்வியின் மடியில் தவழ்ந்தவன் நான்.
உன் விழிகளை பார்த்த பின்பு
வாழ்வில் மகிழ்ச்சியை உணர்ந்தேன்.
உன்னோடு பழகிய நாட்களில்
வெற்றியின் சுவையை ருசித்தேன்,
இப்போதோ மீண்டும் தோழ்வியின் புதல்வனானேன்
நீ என்னை விலகிய பிறகு.

உன் மனதை படிக்க நினைத்தேன் நான்
ஆனால் இறுதியில்
உன் மணப்பத்திரிகையை தான் படிக்க முடிந்தது
இது தான் நீ எனக்கு தரும்
பரிசோ ?

Subscribe to: Posts (Atom)