ஜோசியக்காரனின் கூண்டுக்கிளி !

 

என் எதிர்காலத்தை சொல்ல
உன் நிகழ்காலத்தை சிறை
கொண்ட - நீ
வருந்தி வாடாது இருக்க.  
நானோ உன்னை கண்டும்
கவலையை மறக்க கற்றுக்
கொள்ளவில்லை .

நீயும் நானும் சந்தித்தது என்றோ எங்கோ

எப்பொழுதோ இன்றும் தெரியவில்லை ...
நீ என் இன்பங்களில் என்னருகே
இருந்ததை விட
என் துன்பங்களில் என்னை பிரிந்ததில்லை
நான் உன்னை விரும்பி நின்றேன்

நீயோ என்னை கொன்று இன்பம் கண்டாய் ......

மனசாட்சியும் - சிகரெட்டும்

பூக்களுக்கு வன்னம் தந்தவன்
பட்டாம் பூச்சிக்கு வன்னம் தீட்டியவன்...

எனக்கு அதன் அழகை வர்னிக்கும்
திறனாவது - தந்திருக்கலாம்....

படைத்தவனுக்கு என் இந்த பாகுபாடு ?..
என்னவளை பார்க்கும் முன் ..என்னை சரியாக்கு

எந்திர மனிதர்களை

கண்டு பிடித்த மனிதனோ,

எந்திர வாழ்க்கை வாழ்கிறான்.

கண்டு பிடித்த எந்திர மனிதனுக்கு

மனித வாழ்கையை கற்றுக்கொடுக்க நினைத்து.

- கிருக்கியவனும் ஒரு எந்திர மனிதன்

செருப்பை குத்திய
முள்ளை திட்டுவதில்லை நாம்..
செருப்பை தாண்டியும்..
நம் கால்களை குத்த விட்ட
செருப்பை திட்டும் உலகம்

கரிசனம் காட்ட வழியில்லை..
செருப்பு பதில் சொல்லத் தெரியவில்லை

காதலையும் காதலியையும் சந்திக்க/கொண்டாட,
இந்த ஒரு நாள் மட்டும் போதும்
என்று நினைப்பவர்களுக்கு
மட்டும் - ‘இன்று’ காதலர் தினம்

இந்த உலகத்தில் பசியில்லை,
சாவில்லை,பயமில்லை,நோயில்லை.
எங்கும் அமைதி.
அதில் வாழ எனக்கொரு வாய்ப்பு கிடைத்தது.

சூரியன் உதித்தது,
புதிய உலகம்.
அதில் நோய்க்கு பஞ்சமில்லை
சண்டை,பசி,பயம் ,சாவு
எதற்கும் பஞ்சமில்லை

மீன்டும் என் பழைய உலகத்திற்கு செல்ல
பத்து மனி நேரம்.

பாதை மறவாது செல்வேனா ?

Subscribe to: Posts (Atom)