பல வருடங்களாய்
அடைப்பட்டு.
சாவியில்லாத பெட்டிக்குள்ளிருந்து
வெளிவரத் துடிக்கும் புதையல் தான்
காதல்...
-சாவி கிடைத்தவர்கள் காதலைத் (புதையலைத்)
தொளைத்துவிடுகிறார்கள்,
-சாவி இல்லாதவர்கள்
புதையலைத் தேடுகிறார்கள்.


என்றுமே
வெள்ளையாய் கண்ட நிலா..
இன்று எழுந்த பொழுது..
கண்ணேதிரே
கையருகே..

உடனே
என் நினைவெல்லாம்
அதில் நிறம் பூச ஆசை..

கையருகே என்
கண்களை கூசிய
நட்சத்திரங்கள்..

கற்களை தூக்கி எறிவதய் போல்..
எறிந்து விளையாட
ஆசை..

திடீரென என்னுள் ஒரு மாற்றம்..
நிலவு கையருகே..இருக்கிறதே..
நான் சொர்கத்தில் இருக்கிறேனா..
இல்லை வானே கீழ்
இறங்கியதா..

யோசித்த பொழுது,,மணி
அடித்தது,..பரிட்சை நேரமும்
முடிந்த்து..

--- பதில் தேர்வின் முடிவில்

ஊருக்கே கொடுத்தது வெளிச்சம்
வெட்டியான் வாழ்க்கைக்கு
மட்டும் இருட்டு...
மின்மயானம்

பொறுமை
விதைக்கு மட்டும் தான் சொந்தம்
என்று நினைத்தேன்.
உன் பதிலுக்காக நான் காத்திருந்த பொழுது
தெரிந்தது அது பொய்யென்று

ப்ராஜெக்ட் லீட்லயிருந்து...டாவ் அடிக்குர பெண் வரை
இது பொருந்தும்.

நேரமிருந்தா கருத்த சொல்லிட்டு போங்க...


நீ என்னை பார்த்து சிரித்து கொண்டேயிருந்தாய்
நான் ரசித்திக்-கொண்டேயிருந்தேன்..
உன் அழகில் என்னை மறந்தேன்..
உன்னை கட்டி அனைத்து முத்தமிட நினைத்தேன்,..
அனைத்து முத்தங்களையும் உன்
புகைப் படத்திற்கே கொடுக்க மனமில்லை.
உன்னை நேரில் காண நாட்களை
கடத்தி கொண்டிருக்கிறேன்..

இந்த பதிவு - யாரு யார பிரிஞ்சிருந்தாலும்
பொதுவா பொருந்துமுங்க..

நேரமிருந்தா உங்க கருத்த சொல்லிட்டு போங்க...

உனக்கு கல்லூரியிலே

கடிதம் கொடுக்க
நினைத்தேன்..

ஆனால் உன் பார்வையிலே
என்னை விரட்டினாய்..

இன்று உன்னைத்தேடி
முகவரி அறிந்து வந்து
கொடுத்த போது..

நினைவுக்கு வருகிறது
அன்று காதலன்
இன்று தபால்காரன்

நமக்கு தீராதா இந்த சாபம்
அன்று படிப்பறிவில்லை..
வெள்ளையன் நம் நாட்டையும்
நம்மையும் மிதித்தான்..

இன்று படித்தும்.
படிப் பறிவிருந்தும் ..
நாம் அன்னிய மண்னை மிதித்தோம்.
பெருமை தான்..

அன்னிய மண்னில் மிதி படுகிறோமே..
விடியாதா நம் நாட்கள்?
- அன்னிய நாட்டில் வாழும் உங்களில் ஒருவன்..

Subscribe to: Posts (Atom)