இப்ப மணி 10 ஆகுது ..சனிக்கிழமை ஆபீஸ் இல்லாததால பிரச்சனை எதுவுமில்லை. நேத்து நைட் நடந்த அந்த பார்டியில் ஒரே கூத்து அடிச்சிட்டு .... எப்புடி வண்டிய வீட்டுக்கு சரியா ஓடிட்டு வந்தேன்னு எனக்கு இன்னும் தெரியுல ஒரே தண்ணி மப்பு ..தலை வலி இன்னும் ஏதோ மதிரியவே இருக்கு.
காலிங் பெல் .சத்தம் ...டிங் டிங் . போலீஸ் வீட்டு வாசல்ல நிக்குறாங்க என்ன நடந்துச்சு நேத்துன்னு சரியா தெரியுல..... ஒரு வேலை நைட் யாரு மேலயாவது வண்டிய எதியிருப்போமா ?? .. இல்ல வேர யாரு வண்டிய தூக்கிட்டு வந்துட்டோமா ..
ரூம்மேட்ஸ் வேர இல்ல ..இப்ப என்ன பன்றது ஒரே டென்ஷன்னா இருக்கே .. போலீஸ் : சார் நேத்து நைட் என்ன நடந்துச்சி நீ உங்க டூ வீ லர எங்க எதுத்துட்டு போனீங்க ..?????
சார் அது வந்து ,நான் ..நான் ..
0.75 பைசாக்கு ஒரு பொட்டலம் தான் கடலை வாங்கினேன் இரென்டு பொட்டலம் வாங்கிருந்தா மீதி என்ன சொல்லுவான்னு தெரிஞ்சிருக்கும் முன்னாடி பக்கத்துல பைக் படம் போட்ருக்கு . 75 ம் பக்கத்துல இது மட்டும் தான் போட்ருக்கு .. மீதி பக்கம் இப்புடி இருக்கு எப்புடி இருந்துருக்குமோ ..
இது பக்கம் என் : 75 மட்டுமில்லை பதிவு என்னும் தான்..
மறக்க நினைத்த போதுநினைவுக்கு வந்தது ...நினைவுக்கு வந்தவுடன் மறக்க நினைத்தது ?????வாங்கிய கடன் பழைய காதல் எழுதிய பரிட்சை ...
பொறுமை தீர்ந்தது..
தாய் நாட்டை நோக்கி என்
பயனம் தொடர்கிறது..
பதிவுக்கும் எனக்கும் சிரிது காலம்
விடுமுறை..
மீண்டும் ஒரு சிரிய இடைவேளைக்கு பின்
சந்திப்போம்..
கதை கவிதைஇரண்டிற்கும் ஒருஓற்றுமையும் உண்டு.கவிதையின் பிறப்பிற்குபல சோகக்க் கதைகள்உண்டுகவிதைக்கு க(வி)தை விதை -- ஒவ்வொருத்தருக்கும் ஒரு கருத்துமாற்றுக் கருத்து உண்டு ..சொல்லிட்டு போங்க
அலைகள் மட்டும் தான் ஓயாதா?
என்னுள் இருக்கும் சிந்தனைகளும்
தான்..
கண்ணன் கொடுத்த சீலை
மட்டும் தான் தீறாததா ..
இல்லை என்னுள் இருக்கும்
ஆசைகளும் தான்..
சூரியன் மட்டும் தான்
திசை மாறாது உதிக்கலாமா ?.
இல்லை
நான் செய்யும்/செய்த செயல்கள் கூடதான்..
இப்படி அடிக்கிக் கொண்டே
போகலாம்...என் தலைக்கனம்.
தலைவிரித்து ஆடி அடங்கும் வரை...
பல வருடங்களாய்அடைப்பட்டு.சாவியில்லாத பெட்டிக்குள்ளிருந்துவெளிவரத் துடிக்கும் புதையல் தான் காதல்...-சாவி கிடைத்தவர்கள் காதலைத் (புதையலைத்)தொளைத்துவிடுகிறார்கள், -சாவி இல்லாதவர்கள்புதையலைத் தேடுகிறார்கள்.
என்றுமே
வெள்ளையாய் கண்ட நிலா..
இன்று எழுந்த பொழுது..
கண்ணேதிரே
கையருகே..
உடனே
என் நினைவெல்லாம்
அதில் நிறம் பூச ஆசை..
கையருகே என்
கண்களை கூசிய
நட்சத்திரங்கள்..
கற்களை தூக்கி எறிவதய் போல்..
எறிந்து விளையாட
ஆசை..
திடீரென என்னுள் ஒரு மாற்றம்..
நிலவு கையருகே..இருக்கிறதே..
நான் சொர்கத்தில் இருக்கிறேனா..
இல்லை வானே கீழ்
இறங்கியதா..
யோசித்த பொழுது,,மணி
அடித்தது,..பரிட்சை நேரமும்
முடிந்த்து..
--- பதில் தேர்வின் முடிவில்