தன்னை கடித்த
கொசுவை அடிக்க நினைத்து
தன்னை தானே அடித்துக்
’கொள்ளும்’ / ’கொல்லும்’ 
நாம் ஏமாளியா இல்லை  
கோமாளியா ?

just a funny thought


அன்று ஆட்கள் தேவை
என்ற செய்தியை டீ கடை 
பேப்பரில் படித்தேன்,

இன்று எத்தனை பேருக்கு 
வேலை இல்லை என்ற
செய்தியை அதே டீ கடை 
பேப்பரில் படிக்கிறேன்!

இன்றைய  காலம் 
போதாத காலமா ?

வானவில்லில் உள்ள வண்ணங்கள்
மின்னலில் இல்லை,
இருவருமே வின்னில் தான் பிறந்தார்கள்
இருவருக்கும் வெவ்வேறு குணங்கள்
அவர்களுக்குள் சண்டை இல்லை..
சில நேரங்களில் சந்திப்பதுமில்லை.
விண்ணின் மைந்தர்களின் வாழ்க்கை இப்படி.

ஒரே மண்ணில் பிறந்து
நிறத்திலும் குணத்திலும்
பெரிய வேறுபாடு இல்லாத நம்
மண்ணின் (மனிதர்கள்)மைந்தர்கள் ..
அவர்களுள் ஏன் இத்தனை சண்டை..?
எத்தனை பாதிப்பு!

வானவில்லின் தோற்றலை ஊரெங்கும் 
சிறுவர்கள் ரசிப்பதைப்போல்...
நம் இனத்தவரின் 
சண்டையை ஊரெங்கும் உலகெங்கும்  
வேடிக்கை காட்சியாய்
காட்டி கண்டு ரசிக்கிறது
ஒரு அரசியல் கூட்டம்...

இதை தடுக்க வழியில்லையா?
இல்லை தடுப்பவர்களில்லையா?



விதிமுறை இல்லாமல்
’விதி’யின் முறைப்படி
ஆடும் இந்த வாழ்க்கை ஆட்டத்தில்,
வெற்றி தோல்வி
என்ற பரிசுக்காக
யாருடன் போட்டி,
எதற்கு போட்டி,
என்றே தெரியாமல் 
எதை அடைய இந்த ஓட்டம்?.
’விதி’யை ஒழிப்போம்,
விதிமுறையை தேடுவோம்,
வாழ்க்கை ஓட்டத்தை மாற்றுவோமா?



இருவருமே ஒரே அச்சில் செய்யப்பட்டோமா ?

உன்னிடத்தில் பொறாமை இல்லை.
நான் என்ற தலைக்கனமுமில்லை.
நீயும் நானும் சேர்ந்தே இருந்தும்
நம் முடிவுகள் ஒத்து இருந்ததில்லை

இருந்தும் என்னை
விட்டு நீ விலகவில்லை  
அதனால் தான் என்னுள் இத்தனை குழப்பங்களா?

இல்லை,
உன் ஆசைகளை என்மீது
துளைத்து நீ மட்டும்
நல்லவனாக இருக்க இத்தனை நாடகம்.

இருந்தும் உன்னை விட்டு
விலக எனக்கும் வழி தெரியவில்லை! 
நமக்குள் இந்த போராட்டம் தொடரும்.

 

வியர்வை சிந்த 

உழைத்த காலம் - இறந்த காலம்,
வியர்வை சிந்துவதற்கு  
உழைக்கும் காலம் - நிகழ் காலம்
வியர்வை என்ற வார்த்தைக்கு  
விக்கீயில் பொருள் தேடும் - எதிர் காலம்

என்று முடியும்  

இந்த தொடர் நாடகம்,
என்று மடியும்
இந்த தொலைக்காட்சி மோகம்!

Subscribe to: Posts (Atom)