சுவாசிக்க என்றுமே நமக்கு தடையில்லை
சிந்திக்க என்றுமே நமக்கு தடையில்லை
இப்படி இருக்க
நாம் நம்முடைய தலைவர்களின் தியாகத்தை
உணற ஒரு தனி தினம் - --- சுதந்திரம் ?

இரவுபோய் மீன்டும் தோன்றும் சுரியனல்ல நீ
விடியலில் இறக்கும் ஈசலுமல்ல நீ
பனிரெண்டு வருடத்திற்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சியுமல்ல நீ
நீ தோன்றியது எதற்கு என்பதை அறிந்து,
- இன்றுமுதல் செயல்படு

உனக்கு ஓய்வே இல்லையா ?
எப்பொழுதும் ஓடிக்கொண்டே இருக்கிறாய்
என் சிந்தனையில் - காதலி

உனக்கு ஓய்வே இல்லையா ?
எப்பொழுதும் ஓடிக்கொண்டே இருக்கிறாய்
என் சிந்தனையே - சிந்தனை

கவிதை எழுத சொல்லி மனம் உந்துதடி
ஆனால் என் சிந்தனையோ
உன் பின்னே ஒடுதடி
யார் நீ -- கணினியல்ல கன்னி

கடவுளும்,இயற்கையும் தோல்வியடையும் இடம்.

உலகத்தில் உயிர் வாழ உணவு வேண்டும்
உணவுக்காக உன்னிடம் வந்தேன்
உண்ணவே மறந்த்தேன்
உலகத்தையே மறந்தேன்
யார் நீ -- கணினி (கன்னியல்ல)

உன்னை பார்த்தேன்
என்னை மறந்தேன்
பிறகு உலகையே மறந்தேன்
யார் நீ --- வேலை

வேலை இல்லாத பொழுது எழுதியது

Subscribe to: Posts (Atom)